குடியாத்தம் அருகே இறந்தும் தன் கண்களை தானம் செய்து உலகத்தைப் பார்க்கும் பெண். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

குடியாத்தம் அருகே இறந்தும் தன் கண்களை தானம் செய்து உலகத்தைப் பார்க்கும் பெண்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழையாத்தம் மீனாட்சியம்மன் நகர் திருவள்ளூர் வீதியை சார்ந்த ஹரிபாபுவின் தாயார் அனுசூயா (வயது 53 )உடல் நல குறைவால் இயற்கை எய்தினார்.


உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தகவல் கிடைத்த உடன் Rtn சன் சிஸ்டம் சதீஷ் 3ஜி கோபிநாத் கௌதம் இவர்கள் அனுசூயா மகன் மற்றும் குடும்பத்தார் ஒப்புதலுடன் இவரது கண்கள் தானம் செய்ய முடிவு எடுத்தனர். உடனடியாக வேலூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கண்களை தானமாக வழங்கப்பட்டது. கண் தானத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குடியாத்தம் ரோட்டரி சங்க கண் உடல் தான குழு தலைவர் எம் ஆர் மணி ஏற்பாடு செய்து கொடுத்தார் அம்மையாரின் உடல் தானத்திற்கும் ஏற்பாடு செய்து வருகிறது. என்று குறிப்பிடத்தக்கது


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad