என்எல்சி நிறுவனத்திற்கு 2008-2009ம் ஆண்டு வீடு நிலம் கொடுத்த கிராமத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரி நில எடுப்பு அலுவலகத்திற்கு முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

என்எல்சி நிறுவனத்திற்கு 2008-2009ம் ஆண்டு வீடு நிலம் கொடுத்த கிராமத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரி நில எடுப்பு அலுவலகத்திற்கு முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு 2000 மற்றும் 2021 ஆம் ஆண்டு இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக நெய்வேலி அருகே உள்ள கோட்டகம், உய்யக்கொண்டராவி,கத்தாழை வளையமாதேவி,கரிவெட்டி, மும்முடி சோழன் ஆகிய கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி உள்ளனர்.


அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது பின்னர் தற்போது கூடுதலாக 2000 ம் ஆண்ட  முதல் 2005 ம் ஆண்டு வரை நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கூடுதலாக 6 லட்சமும் 2006 முதல் 13 ம் ஆண்டு வரை கூடுதலாக 10 லட்சமும் மற்றும் 14 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது..


இந்த கருணை கூடுதல் இழப்பீட்டுத் தொகை வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை,மும்முடிசோழன் ஆகிய கிராமத்திற்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது


ஆனால் இருப்பினும் 2008 /2009 ஆம் ஆண்டு நிலங்களை கொடுத்த கோட்டகம் மற்றும் உய்யக்கொண்டராவி கிராமத்தில் உள்ள நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு என்எல்சி நிறுவனம் கூடுதலாக இழப்பீடு தொகை வழங்கவில்லை எனவே தங்களுக்கும் கூடுதல் இழப்புக்கு தொகை வழங்க கோரி என்எல்சி நிறுவனத்தை வலியுறுத்தியும் நெய்வேலி வட்டம் 27  பகுதியில் அமைந்துள்ள நில எடுப்பு அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad