விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று டிசம்பர் 3 இயக்கம் புதிய தலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் மாநில தலைவர் பிஎம்என் தீபக் கலந்து கொண்டு தமிழக அரசு உத்தரையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும், தமிழக அரசின் சுய வேலைவாய்ப்பின் ஊக்குவிக்கும் அடிப்படையில் மாற்றுத் திறனாளி உரிமைச் சட்டம் 2016 பிரிவுபடி அரசு கட்டிடங்களில் ஆவின் நிறுவனம் மூலம் ஆவின் பால் கடை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு சட்ட 2016ன் படி மாற்றுத்திறனாளிகள் சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்த அனுமதி வழங்க வேண்டும், மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகளை கண்டித்து மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அவருடைய மெத்தனம் போக்கை கண்டித்தும் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான மாற்றத்தினால் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக