காரியாபட்டி அருகே விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

காரியாபட்டி அருகே விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.


ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர நிறுவனங்கள் சார்பாக விவசாயிகள் பயிற்சி முகாம் மல்லாங்கினரில், நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் மற்றும்  கிரீன் ஸ்டார் நிறுவனம், நபார்டு வங்கி மற்றும் சீட்ஸ் நிறுவனம் சார்பாக விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  பயிற்சி முகாமில், மக்காசோளம், மிளகாய், பருத்தி, மற்றும் சிறுதானியங்கள் ஒருங்கிணைந்த உர மேலாண்மை,  இயற்கை உரமிடுதல். மண்வளம் பாதுகாப்பு, அதிக மகசூல் பெற கையாளவேண்டிய புதிய தொழில்நுட்பங்கள்,  குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



முகாமில், ஸ்பிக் மாநில விற்பனை மேலாளர் ஜெயபாலன், மண்டல மேலாளர் அருணாசலம், பாண்டியராஜன் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில், விவசாயி   களுக்கு  சிறுதானிய பயிர் சாகுபடிக்கு விதைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad