திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்தில் அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்தில் அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்தில் அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்



திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் இணை இயக்குனர் மாரிமுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் , அவர்களிடம் அரசாணை 293- ஐ நிறைவேற்றிடவும், 


அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு,பணப் பலன்களை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, உடனடியாக அமல்படுத்த கோரியும் மனுவை அளித்தனர்.


 பின்னர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைவர் பிரபாகரன், மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மாவட்ட தலைவர் பசுபதி மற்றும் மருத்துவர்கள் என உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad