திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி குறித்த விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கான போட்டி- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நெகிழி இல்லா மாவட்டமாக உருவாக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைத்தார். அது பொதுமக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட பள்ளிக்கிடையேயான நெகிழி குறித்த விழிப்புணர்வு சுமார் 100 மேற்பட்ட பள்ளிகள் இதில் கலந்து கொண்டனர் கட்டுரை போட்டி, பேச்சிப்போட்டி, ஓவியப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடைப்பெற்றது.
அதில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று பரிசும் சான்றிதழும் வழங்கினார்.
மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கினார்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக