திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், புகையிலை மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது..இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில்,காவல் ஆய்வாளர் மணிகண்டன்,பிஷப் தார்ப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலத்திட்ட அலுவலர்கள் ராஜேஷ் மற்றும் ஏஞ்சலின் பிரபா ஆகியோர்களின் முன்னிலையிலும் புகையிலை மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் கூறுகையில்:- மாணவ மாணவிகளுக்கு புகையிலை மற்றும் போதை பயன்படுத்துவதால் உடலுக்கும் மனதிற்கும் மிகவும் கெடுதல் இதன் மூலமாக குடும்பம் மற்றும் சுற்றுவட்டார நண்பர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் இதனால் உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதால் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் மேலும் உங்களது நண்பர்கள் கடைகளில் வாங்குவது தெரிந்தால் அதனை ஆசிரியர்களுக்கு அல்லது காவல் துறையினர்களுக்கு தகவல் அளிக்கவும் இதனால் அவர்களை போதை அடிமையிலிருந்து பத்திரமாக மீட்டெடுக்கலாம் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பிஷப் டாப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள்,காவல் சார்பு ஆய்வாளர்கள்,காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக