கன்னியாகுமரி கடற்கரையில் சர்வதேச அளவிலான காற்றாடி திருவிழாவினை பால் வளத்துறை துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார், - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

கன்னியாகுமரி கடற்கரையில் சர்வதேச அளவிலான காற்றாடி திருவிழாவினை பால் வளத்துறை துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்,

கன்னியாகுமரி கடற்கரையில் சர்வதேச அளவிலான காற்றாடி திருவிழாவினை பால் வளத்துறை துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார், தமிழக அரசின்  கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுல வளர்ச்சித்துறையின் சார்பில் 3 நாட்கள் நடைபெறவுள்ள மாபெரும் சர்வதேச அளவிலான காற்றாடித் திருவிழாவினை  பால் வளத்துறை துறை அமைச்சர்.த.மனோ தங்கராஜ்  மாவட்ட ஆட்சித்தலைவர் வி.என்ஸ்ரீதர்.  தலைமையில்; நாகர்கோயில் மாநகராட்சி மேயர் ரெ.மகோஷ்  முன்னிகையில்  துவக்கி வைத்தார்.


பின்னர் அவர் பேசுகையில் இந்திய திருநாட்டின் தெற்கு எல்லையில் வங்காள விரிகுடா இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கும் முனையில் கன்னியாகுமரி அமைந்துள்ளது. இந்தியாவின் சிறப்புமிகு சுற்றுவா தலங்கள் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகவும் அதிக கடற்கரை சுற்றுலாத்தலங்களை கொண்ட இடமாகவும் கன்னியாகுமரி தகழ்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு சுமார் 38 இலட்சம் சுற்றுலாப் பயணிகளும் 2022 ஆம் ஆண்டு 1 கோடியே 64 இலட்சம் சுற்றுலாப்பயணிகளும் 2023 ஆம் ஆண்டு ஜீன் மாதம் வரையிலும் சுமார் 55 இலட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிந்துள்ளனர். கடந்த ஜீன் மாதத்தில் விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை பாரியையிடுவதற்கு 1.50441 சுற்றுலாப் பயணிகளும் மாவட்டம் முழுமைக்கும் சுற்றுவாத்தலங்களை பார்வையிடுவதற்கு 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிந்துள்ளனர். 


இதனால் அதிகப்படியான சுய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை சுற்றுலா துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முதல்முறையாக காற்றாடி திருவிழா (Kite Festival) இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை (3நாட்கள்) நடைபெறவுள்ளது. இன்று கன்னியாகுமரி சூரிய அஸ்தமன பகுதியிலும், அடுத்த இரண்டு நாட்கள் சங்குத்துறை கடற்கரையிலும் பிற்பகல் 02.00 மணி முதல் 07:00 மணி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தாய்லாந்து. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களிலிருந்து காற்றாடி இயக்குபவர்கள் கலந்து கொண்டு. 50க்கும் மேற்பட்ட வண்ணமயமான பல்வேறு வடிவங்களில் காற்றாடி பறக்கவிட்டுள்ளனர்.


சுன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையில்  பள்ளி. கல்லூரி விடுமுறை நாட்களில் பட்டம் விடுவதை பொலுதுபோக்காகவும். உற்சககமாகவும் கொண்டாடுவோம். இந்த நினைவு இப்போது என்னுள் ஏற்பட்டுள்ளது. இங்கு வருகை தந்துள்ள மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்வதோடு ஆரோக்கியமான இதுபோன்ற நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு  பால் வளத்துறை துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  தெரிவித்தார்.


நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன்,  பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர். கௌசி மாவட்ட வருவாய் அலுவயர் ஜெ.பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராஜட் சுட்டன், ஆம் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், மாவட்ட சுற்றுவா .அலுவலர் .ரொ சதீஷ்குமார். கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அழகேசன், அகஸ் திஸ்வரம் வட்டாட்சியர் -ராஜேஷ், திருபாடி. தாமரை பாரதி, தமிழ்நாடு ஹோட்டல் மேலாளர் .உதயகுமார். உதவி சுற்றுலா அலுவலர் செல்வி.த.கீதாராணி, உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், குளோபல் மீடியா பாக்கிர இயக்குநர் பௌடிக் சேவியர், செயல் அலுவலர் ஜீவநாதன் உட்பட ஆசிரியர்கள், பள்ளி சுல்லூரி மாணவ. மானவியர்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பவர் கவந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad