நீலகிரிமாவட்டம் அதிகரட்டி பேருராட்சியில் இயற்கை உரம் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு,வளம் மீட்பு பூங்காவில் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நீலகிரியை 'ஆர்கானிக்' மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை ஆகியவை முடிவெடுத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றன.மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால், பல பகுதிகளில் விவசாயிகள் வேதி உரங்களை தவிர்த்து, இயற்கை உரத்திற்கு படிப்படியாக மாறிவருகின்றனர், இதன் படி அதிகரட்டி பேரூராட்சி. வளம் மீட்பு பூங்காவில், இயற்கை உரம் தயாரிக்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. அதிகரட்டி பேரூராட்சி உட்பட்ட, வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து அன்றாடம் வெளியேறும் குப்பைகள், மார்க்கெட்டில் இருந்துவெளியேறும் காய்கறி கழிவுகள் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு வளம் மீட்பு பூங்காவுக்கு கொண்டு செல்லப் படுகிறது.
பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாத்திகளில் கொட்டி, குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது. அதில்,மட்கும் குப்பைகள் பாத்திகளில் கொட்டி இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது, மட்காத குப்பைகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.பின்பு, சலிக்கப்பட்ட உரம் தரத்திற்கு ஏற்ப விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும், இங்கு தயாரிக்கப்படும் உரம், பூங்காவில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான விளை நிலத்தில் காய்கறி பயிர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கையால், திடக்கழிவு மேலாண்மை திட்டம் அதிகரட்டி பேருராட்சியில் சிறப்பாக செயல்படுகிறது.
அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலர் நட்ராஜ் கூறுகையில், 'அதிகரட்டி.வளம் மீட்பு பூங்காவில் இயற்கை உரம் விற்பனைக்கு தயாராக உள்ளது. இங்கு, உற்பத்தி செய்யப்படும் உரம் மிகவும் தரமாக உள்ளதால், விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்று, மலை காய்கறி பயிர்களுக்கு அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். உள்ளூர் விவசாயிகள், தங்களது வீட்டு தோட்டங்களுக்கு அதிகளவில் வாங்கி செல்கின்றனர்,'' என்றார்."
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக