நீலகிரி மாவட்டத்தில் 53 லட்ச மதிப்பிலான மக்கள் நல பணிகளை தொடங்கி வைத்து 112 லட்ச மதிப்பில் நடைபெறும் பணிகளை சுற்றுலா துறை அமைச்சர் கா.இராமசந்திரன் ஆய்வு செய்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டத்தில் 53 லட்ச மதிப்பிலான மக்கள் நல பணிகளை தொடங்கி வைத்து 112 லட்ச மதிப்பில் நடைபெறும் பணிகளை சுற்றுலா துறை அமைச்சர் கா.இராமசந்திரன் ஆய்வு செய்தார்

 


53 லட்ச மதிப்பிலான மக்கள் நல  பணிகளை தொடங்கி வைத்து 112 லட்ச மதிப்பில் நடைபெறும் பணிகளை சுற்றுலா துறை அமைச்சர் கா.இராமசந்திரன் ஆய்வு செய்தார், நீலகிரி மாவட்டம்  அதிகரட்டி பேரூராட்சி வளமீட்பு பூங்கா பகுதியில் நடைபெற்ற நிகழ்சியில்  சுற்றுலா துறை அமைச்சர் கா.இராமசந்திரன்  53 லட்ச மதிப்பிலான பணிகளைளை தொடங்கி வைத்தார்.


அங்கு  மரகன்றுகள் நட்டு  வளமீட்பு பூங்காவை ஆய்வு செய்தார் பின்னர் நடைபெற்ற நிகழ்சியில் 28.65 லட்சம்  மதிப்பில் கலைஞர் நகர்புற திட்டம்  மூலம் சேமந்தா முதல் பூசானிதுறை வரை  சிமெண்ட் காங்ரீட் சாலை பணி, 25 லட்சம் மதிப்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் தூரட்டி கிராமத்தில் சாலை பணி உள்ளிட்ட மக்கள் நலபணிகளை  தொடங்கி வைத்தார்.

இத்துடன் 87.50 லட்ச மதிப்பில் காட்டேரி முதல் கேத்திபாலாடா வரை தார்சாலை மேம்பாடு,கோடேரி கிராமத்தில் சாலை மேம்பாடு ,24.50 லட்சம் மதிப்பில் வளமீப்பு பூங்கா காங்ரீட் தரைதளம் மற்றும் கூரை அமைக்கும் பணி உள்ளிட்ட மக்கள் மேம்பாட்டு பணிகளையும் அமைச்சர் இராமசந்திரன் ஆய்வு செய்தார் 


அவருடன் பேருராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராகிம்ஷா.அதிகரட்டி பேருராட்சி செயல் அலுவலர் நட்ராஜ்,அதிகரட்டி. பேரூராட்சி தலைவர்  ,திமுக பொது குழு உறுப்பினர் செல்வம், பேருராட்சி செயலார் உதயதேவன்  ஆகியோர் உடன் இருந்தனர் 


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad