அலங்காநல்லூரில், மூப்பனார் பிறந்தநாள் - தமிழ் மாநில காங்கிரஸ் மாலை அணிவித்து மரியாதை :
அலங்காநல்லூர், ஆக:19.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ,
மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களின் 92-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.தனுஷ்கோடி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில், மாநில பொது செயலாளர் பழனிவேல், மாநில செயலாளர் பரத் நாச்சியப்பன், மாவட்ட துணைத் தலைவர்கள் பால்ச்சாமி, சிவா, கருப்பையா, கச்சைகட்டி பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர்கள் புதுப்பட்டி கார்த்திக், முரளி, வாடிப்பட்டி பாலசரவணன், பொதும்பு செல்வம், பரவை பேரூர் தலைவர் முத்துராமன், அலங்காநல்லூர் பேரூர் பால்பாண்டி, ரமேஷ், ரசூல், முத்துகாமாட்சி, மாணவரணி சௌந்தர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக