மதுரையில், விமானம் நிறுத்தி வைப்பு.
மதுரையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி
வைக்கப்பட்டது.
பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெங்களூரில் இருந்து மதுரை வந்த இன்டிகோ விமானம் காலை 8:30 மணி அளவில் மதுரை வந்தடைந்தது. மதுரையில் இருந்து 68 பயணி களுடன் பெங்களூர் செல்ல வேண்டிய விமானம் பயணிகள் ஏறி புறப்பட தயார நிலையில், இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பயணிகள் மாற்று வழியாக 63 பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
4 பயணிகள் டெல்லி செல்லும் விமானம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஒருபயணி பணத்தை திரும்ப பெற்று விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக