வாலாஜா அடுத்த காவேரிப்பாக்கம் அருகே அதிகாலையில் தீ பற்றி எரிந்த 108 ஆம்புலன்ஸ்..!!
ஆந்திர மாநிலம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த காதர் பாஷா ( வயது 70) என்பவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் அவதி பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக காதர் பாஷா தனது உறவினர்களுடன் நபிபாஷா, அகமது பாஷா, அபிஷா, அமாஜி, ஆகியோருடன் ஆம்புலன்ஸ் மூலம் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணி அளவில் சென்னை நோக்கி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அதே வழியாக லாரி ஒன்று கடப்பாவிலிருந்து கற்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை டூ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் அடுத்த பெரும்புலிப்பாக்கம் அருகே 108 ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது கடப்பாக்கல் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் திடீரென ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பிடித்து ஆம்புலன்ஸ் பற்றி எரிந்தது இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் சிவா மற்றும் சுனில் உள்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.இதில் நபி பாஷா மற்றும் அகமது பாஷா ஆகிய இருவருக்கும் இரண்டு கை கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.இதனை அறிந்த சாலையில் செல்லும் லாரி மற்றும் வாகன ஓட்டுனர்கள் இச்சம்பவம் குறித்து அவலூர் காவல்துறையினருக்கும் மற்றும் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து அணைக்க முயன்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்து சேதமானது மேலும் இந்த விபத்து குறித்து அவலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நபி பாஷா மற்றும் அகமது பாஷா ஆகியோரை மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை எம் எம் எஸ் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக