ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு மாவட்ட ஆட்சியர் தகவல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஆகஸ்ட், 2023

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்.


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கடலூர் மாவட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு (District Project Management Unit) மற்றும் தகவல் மற்றும் கல்வி தொடர்பு (IEC Cell) மையம் அமைத்திட பின்வரும் தற்காலிக பணியிடங்கள் வெளி நிறுவனத்தின் (Out sourcing) மூலம் நிரப்பப்பட உள்ளது.

திடக்கழிவு மேலாண்மை (ம) சுகாதார நிபுணர் தற்காலிக பணியிடங்கள் எண்ணிக்கை 2 மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நிபுணர் தற்காலிக பணியிடங்கள் 1 ஆகியவற்றிற்கு ஊதியம் 35,000/- கல்வித்தகுதி சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது கட்டட பொறியியலில் பட்டப்படிப்பு முடித்திருத்தல் வேண்டும்.


திட்டமிடுதல் ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் 1 தற்காலிக பணியிடத்திற்கு ஊதியம் 35000/- கல்வித்தகுதி B. Tech., / M.B.A., / M.Sc., அல்லது அதற்கு நிகரான பட்டப்படிப்பு முடித்திருத்தல் வேண்டும். மேற்காணும் பணியிடங்களுக்கான வயது வரம்பு 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பெறும். 


தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் பணியிடங்கள் எண்ணிக்கை 2, ஊதியம் 25,000/- கல்வித்தகுதி முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருத்தல் வேண்டும். வயது வரம்பு 21 முதல் 35 க்குள் இருத்தல் வேண்டும். பணி அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பெறும்.


தகுதியான விண்ணப்பதாரர்கள் 15.08.2023 க்குள் உதவித் திட்ட அலுவலர், உட்கட்டமைப்பு-II, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடற்கரைச் சாலை, கடலூர் அலுவலரிடம் தங்களது கல்வித் தகுதி, மற்றும் பணி அனுபவம் குறித்த சுய விவரம் (Resume) சமர்ப்பித்திட தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.


கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/