செங்கல்பட்டு மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் கே.மரகதம் குமரவேல் ஆகியோரின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அமைப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் மதுராந்தகம் நீர்பெயர் ஊராட்சியில் இன்று (31.08.2023) நடைபெற்றது.
இதில் சிறப்பு ஆலோசனை வழங்கி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அமைப்பதற்கான புத்தகங்களை வழங்கினார்கள், இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கே. கீதா கார்த்திகேயன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனுர் வி.பக்தவச்சலம், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் அதிமுக கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக