செய்யாறு அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு சட்ட மன்ற உறுப்பினர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

செய்யாறு அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு சட்ட மன்ற உறுப்பினர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் புலிவலம் கிராமத்தில் வசிக்கும் ராமகிருஷ்ணன் உமா என்பவரின் வீட்டில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது தகவல் அறிந்த செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி பி ஏ.எம் எல் ஏ அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவிம் 1 சிப்பம், அரிசி காய்கறி, மளிகை பொருட்கள் வழங்கி அரசின் மூலம் வீடு வழங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் 


உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் திமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.தினகரன் ஒன்றிய குழு உறுப்பினர் குணாநிதி ஊராட்சி மன்ற தலைவர் வெ.சீனிவாசன் மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் செந்தில்குமார் மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம் வெங்கடேசன் நாட்டேரி சோமசுந்தரம் ராந்தம் லோகநாதன் வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி கிராம நிர்வாக அலுவலர் ராஜி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

செய்யாறு செய்தியாளர்
MS.பழனிமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad