மேற்கு தொடர்ச்சி மலை பக்காசுரன் மலை அடிவாரத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் திருக்கோவிலில் இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் அம்மனின் அருள் பெற்று அன்னதானத்தில் கலந்து கொண்டும் சிறப்பு பூஜையினை வழிபட்டு சென்றனர்.
மேலும் திருக்கோவிலில் முன் மண்டபம் வேலை நடைபெறுவதால் பக்தர்களுக்கு வசதியாக நடை பாதை நிழற்குடையும் அமைத்து தரப்பட்டுள்ளது பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வழங்கப்படுகிறது பக்தர்களின் கூட்ட நெரிசலை தடுக்க போலீஸ் காவல் நண்பர்களும் உதவி செய்து வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கோவில் வரை சிறப்பு பேருந்து இயக்கப்படுகின்றது.
- தமிழக குரல் செய்திகளுக்கா கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக