தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டொ்லைட் ஆலையை, முழுமையாக அகற்ற வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டொ்லைட் ஆலையை, முழுமையாக அகற்ற வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடியில், தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவா் அ. வியனரசு தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொருளாளா் தங்கராசு, மாநில துணைப் பொதுச்செயலா் தா.சு. சுரேசு, தென்மண்டலச் செயலா் பா. செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா். பொதுச்செயலா் சீனிவாசன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் முத்துமாரியப்பன் நன்றி கூறினாா்.


கூட்டத்தில் முக்கிய நிகழ்வாக, மூடப்பட்ட ஸ்டொ்லைட் ஆலையை, முழுமையாக அகற்ற வேண்டும். தாமிரவருணி ஆற்றின் மருதூா் அணை முதல் புன்னைக்காயல் வரை சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி, சுமார் 53 பாசனக் குளங்களையும் குடிமராமத்துத் திட்டத்தின் படி மறு சீரமைப்பு செய்ய வேண்டும். வெள்ளம் ஏற்படும் காலங்களில் தாமிரபரணி உபரி நீரை, எப்போதும்வென்றான் நீா்த் தேக்கத்துக்கு கொண்டு வரவேண்டும் என்பன போன்ற 10 அம்ச தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad