திருப்பத்தூர் அருகே நத்தம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் அருகே நத்தம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நத்தம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது, இப்பள்ளியில் 1983- 2023-ம் ஆண்டில் 40 வருடம் காலம் முடித்து இன்றிய தினம் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அபிப் அகமத் தலைமை யில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் பணிபுரிகின்றனர். முன்னாள் மாணவர்களை இந்நாள் மாணவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வரவேற்றனர். 


நீண்ட நாட்களுக்கு பிறகு ஆசிரியர்களை சந்தித்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்கள், முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கெடா விருந்து அளிக்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad