திருவண்ணாமலையில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலையில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்.


பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு 27-8-23 அன்று திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாக கூட்டரங்கில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம் மற்றும் அருணை பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து முகாமினை பார்வையிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில் 147 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.12.48 கோடி மதிப்பில் கடனுதவிக்கான காசோலையினையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானியமாக 51 நபர்களுக்கு ரூ.1.54 கோடி மதிப்பில் கடனுதவிக்கான காசோலையினையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி,மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை,M.P. சட்டமன்ற உறுப்பினர்கள் S.அம்பேத்கார், பெ.சு.தி.சரவணன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) ஆ.ஜோதிமணி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சையத்சுலைமான், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad