சோளிங்கரில் தேசிய முற்போக்கு திராவிட கழக செயல் வீரர்கள் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

சோளிங்கரில் தேசிய முற்போக்கு திராவிட கழக செயல் வீரர்கள் கூட்டம்.


இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தேசிய முற்போக்கு திராவிட கழக செயல் வீரர் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும்  முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினருமான பி ஆர் மனோகரன் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் காசிநாதன் மாவட்ட பொருளாளர் அசோகன் ஆகியோர் முன்னிலையில் செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது.


இதில் அனைவரையும் சோளிங்கர் நகர செயலாளர் ரகு வரவேற்றார் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கழகத் துணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வோமான பார்த்தசாரதி கலந்து கொண்டு அனைத்து கிராமங்களிலும் கொடியேற்ற வேண்டும் பழைய பொறுப்பாளர்களை திரும்பவும் கட்சியில் இணைக்க ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் வருகின்ற 16ஆம் தேதி கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ராணிப்பேட்டை வருகை தருவதால் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்  ஆலோசனை வழங்கினார். 


மாவட்ட துணை செயலாளர்கள் தினேஷ் குமார். ரவி. பிரபாகரன். ஹேமலதாபாலாஜி. சரவணன், நகர ஒன்றிய பேரூராட்சி கழக பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


- செய்தியாளர் சுரேஷ்குமார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad