கோவில்பட்டியில் காவல்துறை உத்தரவினை மதிக்காத வாகன ஓட்டிகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

கோவில்பட்டியில் காவல்துறை உத்தரவினை மதிக்காத வாகன ஓட்டிகள்.


கோவில்பட்டி, அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்த வேண்டிய ரேக்கில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால், பேருந்துகளை நிறுத்த முடியமால் ரேக்கிர்க்கு வெளியே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் பேருந்து நிலையத்திற்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் திரும்பும் இடங்களிலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. 



இதையடுத்து பேருந்து நிறுத்தும் ரேக் மற்றும் பேருந்து திரும்பும் இடங்களிலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த கூடாது மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டி இருந்தாலும் அதையும் மீறி இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. எனவே அவ்வாறு நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமின்றி அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad