பிஞ்சுகளுக்கு நஞ்சு ஊட்டும் பெற்றோர்கள்! சமைக்கும் உணவில் சாதியம் பார்க்கும் கொடுமை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

பிஞ்சுகளுக்கு நஞ்சு ஊட்டும் பெற்றோர்கள்! சமைக்கும் உணவில் சாதியம் பார்க்கும் கொடுமை.

பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் வரை படிக்கும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்த காலை உணவு திட்டத்தில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலை உணவு குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது. 


இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே உள்ள வள்ளிபுரம் ஊராட்சி காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியிலும் தமிழக அரசின் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் மொத்தம் 47 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தீபா என்பவர் உணவு சமைத்து பள்ளி மாணவர்களுக்கு பரிமாறி உள்ளார். 


இதை அறிந்த ஒரு தரப்பினர் பள்ளி குழந்தைகளை உணவு சாப்பிட அனுமதிக்காமல் மாற்றுச் சான்றிதழ் கொடுங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம் என காலை உணவை புறக்கணித்து குழந்தைகளை சாப்பிட விடாமல் தடுத்துள்ளதாகவும் இந்த சம்பவம் திடீரென பரபரப்பை ஏற்படுத்தி விட்டது இதை அறிந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


இதில் உணவு சமைக்கும் தீபாவை மாற்ற முடியாது என அரசு தரப்பில் தெரிவித்ததால் சமாதானம் ஆகாத ஒரு தரப்பினர் உணவை குழந்தைகளுக்கு கொடுக்காமல் அழைத்துச் சென்றனர். மறுநாள் பள்ளியில் தீபா உணவு சமைத்த நிலையில் 34 பள்ளி குழந்தைகள் உணவு அருந்தியுள்ளனர் 13 பேர் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளனர். 


இது பற்றி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பெற்றோர்கள் சிலர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது மீண்டும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad