கோவை மாவட்டம் மணியகாரன் பாளையம் பகுதியில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சர்மிளா 34 வயது இவர் மணியகாரம்பாளையம் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார், மேலும் ஷர்மிளா அப்பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் ஷர்மிளா இரண்டு நாட்களாக சிறிது உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார் திடீரென்று கடைக்கு செல்லாமல் இருந்ததால் வீட்டிலிருந்த உறவினர்கள் சென்று பார்த்த போது ஷர்மிளா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக