திருச்செந்தூரில் உலக நன்மைக்காக அகண்ட முருகா நாம ஜபம் நடைபெற்றது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

திருச்செந்தூரில் உலக நன்மைக்காக அகண்ட முருகா நாம ஜபம் நடைபெற்றது!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசாழ்வார் பிள்ளையார் கோவிலில் உலக க்ஷேமத்திற்காக 24 மணி நேரம் இடைவிடாத முருகா நாம ஜபம் நடைபெற்றது. 11.9.1998 ஆம் ஆண்டு திருச்செந்தூா் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கைங்கர்ய த்ரிஸ்வதந்திரர்கள் ஸபா மற்றும் ஸ்வதந்திர பரிபாலன ஸ்தலத்தார் சபா ஆகிய இரண்டு சபையும்  இணைந்து தொடங்கி வைத்தது.

அதனை தொடர்ந்து  வருடா வருடம் அகண்ட முருகா நாம ஜபம் நடைபெற்று வருகிறது. இந்த வருடம்  நேற்று   106 வது ஆண்டாக நடைபெற்றது. காலை  5 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 6 மணிக்கு திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகில் உள்ள அரசாழ்வார் பிள்ளையார் கோவிலில் முருகா நாம ஜபம் ஆரம்பமானது.


இன்று  காலை 6 மணி வரைக்கும் 24 மணி நேரம் இடைவிடாத அகண்ட முருகா நாம ஜபம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad