மத்திய அரசு சமீபத்தில் இந்தியன் பீனல் கோட் என்று இருந்த தலைப்பை, இந்தியில் மாற்றம் செய்து அறிவித்ததை எதிர்த்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம் என்பதை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து, இனி இப்படித்தான் கோர்ட்டுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். இனிமேல் இந்திய தண்டனைச் சட்டம் அல்லது இந்தியன் பீனல் கோடு என்று சொல்லக்கூடாது என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து தாராபுரம் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கலைச்செழியன், செயலாளர் ராஜேந்திரன்,பொருளாளர் வெங்கடேஸ்வரன் துணைச் செயலாளர் சிவகுமார் மூத்த வழக்கறிஞர்கள் ரமணி,தென்னரசு, முருகசாமி,பழனிச்சாமி,சேகர் உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திணிக்கும் இந்தியை எதிர்த்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக