வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்று கூறி தீவிர சிகிச்சை பிரிவின் கண்ணாடிகளை உடைத்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் நாகராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்று கூறி தீவிர சிகிச்சை பிரிவின் கண்ணாடிகளை உடைத்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் நாகராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தமுத்துப்பட்டி பூனைக்கல்மேடு என்ற இடத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இதில் தமுத்துபட்டியை சேர்ந்த நகைக்கடை தொழிலாளி கவியரசன் என்பவரும் முத்துபழனியூரை சேர்ந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஈஸ்வரன் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.


இருவரையும் மீட்ட கவியரசனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அப்போது அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் இல்லாததால், ஆத்திரமடைந்த மது போதையில் இருந்த  இந்து முன்னணி வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் நாகராஜ் மற்றும் சிலர் அவசர சிகிச்சை பிரிவின் கண்ணாடி கதவு மற்றும் குழந்தைகள் பிரிவில் இருந்த கண்ணாடிகளை கற்களை கொண்டு அடித்து நொறுக்கினர்.


அதன்பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு வந்த கவியரசனை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து சென்றுவிட்டனர்.  இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad