திருமங்கலம் கற்பகநகர் ரயில்வே கேட்டில் ரயில்வே மேம்பாலம் அமைத்திட கோரியும், திருமங்கலம் சுற்றுவட்டார மக்களின் போக்குவரத்து நெருக்கடியை கவனத்தில் கொண்டு வெளியூர் பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே அமைத்திட கோரியும், திருமங்கலம் மக்கள் பயன்பெறும் வகையில் பொருத்தமான இடத்தை தேர்வு செய்து கூடுதலாக புதிய நவீன மார்க்கெட் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், நகரில் கழிவு நீர் வாய்கால்களை இணைத்து பாதாள சாக்கடை அமைத்திட கோரியும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கக்கூடிய தண்ணீரை சுத்திகரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க கோரியும் மேலும் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமங்கலம் தாலுகா குழு சார்பில் ஒன்றிய மாநில அரசுகளையும் திருமங்கலம் நகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி கட்சியின் தாலுகா செயலாளர் ஆர் மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.செல்லக்கண்ணு, தாலுகா குழு உறுப்பினர் ஜி.முத்துராமன், எம்.சித்திரவேலு, சிஐடியு வி.ராஜேந்திரன், ஆகியோர் பேசினார்கள். நிறைவு செய்து வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கார்டு பிரேமலதா மார்க்கெட் தொழிலார் சங்க பெண்கள் உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக