நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை மையமாக வைத்து 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அந்த படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால், அதில் இடம் பெற்ற பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள பெள்ளிக்கு, பணி நியமன ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, I.A.S. வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு. I.A.S முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் சீனிவாச ரெட்டி.I.F.S. முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் டி. வெங்கடேஷ் I.F.S, திருமதி பெள்ளி அவர்களின் கணவரும் யானை பராமரிப்பாளர் மான பொம்மன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
"நீண்ட நாட்களாக அரசு வேலை என்ற கனவுடன் காத்திருந்த ஆஸ்கர் நாயகி பெள்ளியின்கனவு நனவாகி உள்ளது இதன்மூலம் முதல் பெண் யானை பராமரிப்பாளர் என்ற சிறப்பையும் பெள்ளி பெற்று உள்ளார் எனபது குறுப்பிடதக்கதாகும்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக