திருவண்ணாமலை கிரிவலத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலை கிரிவலத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.

ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று காலை முதல் கிரிவலப் பாதையில்  குவிந்து பக்தர்கள்.

திருவண்ணாமலை என்றவுடன்  அண்ணாமலையாரின் ஆன்மீக பக்தர்களுக்கு நினைவுக்கு வருவது 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் தான்.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நாட்களில் பல லட்சம் பக்தர்களும் பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசித்து செல்வது வழக்கம்.

அதன்படி ஆடி மாத பௌர்ணமியான, இன்று அதிகாலை 03.20 மணிக்கு தொடங்கி நாளை ஆகஸ்ட் 2- ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 01.09 மணிக்கு நிறைவடைய உள்ளதாக திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை திருக்கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக பௌர்ணமி முழு நிலவு, இன்று இரவு வர உள்ளதால், இன்று மாலை நேரத்துக்கு மேல் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கிரிவலப் பாதையில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தர்களின் வசதிக்காக சென்னை, பெங்களூர், சேலம் வழியாக 200 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்றும் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை கூட்டப்படும் என்றும் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீக பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருக்கோவில் கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆங்காங்கே குடிநீர் வசதியும் அடிப்படை வசதியும் தற்காலிக பேருந்து நிலையங்களும் பார்க்கிங் வசதிகளும் முறையாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் ஏராளமான போலீசார் கிரிவலப் பாதை, நகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/