புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது, இந்நிகழ்வில் பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் திரு திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் நிலைய மருத்துவ அலுவலர் சிவகலை எம்பிபிஎஸ் அவர்கள் முன்னிலையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் லயன்ஸ் சங்கத்தின் செயலர் திரு யோகமுருகன் பொருளர் திரு லெட்சுமணன் வட்டார தலைவர் காட்டுப்பட்டி திரு முருகானந்தம் கார்த்தி &கோ திரு கார்த்திகேயன் திரு ஆர் மணிகண்டன் திரு எஸ் மணிகண்டன் பகுதி சுகாதார செவிலியர் திருமதி ராஜேஸ்வரி நிலைய செவிலியர் திருமதி தீபா மருந்தாளர் திரு கருப்பையா கிராம சுகாதார செவிலியர்கள் இடைநிலை செவிலியர்கள் மற்றும் பயணிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் நிலைய மருத்துவர் சிவகலை எம்பிபிஎஸ் அவர்கள் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் நிலைய சுகாதார ஆய்வாளர் திரு தியாகராஜன் நிகழ்ச்சினை ஏற்பாடு செய்து வரவேற்புரை வழங்க முடிவில் பொருளர் திரு யோகமுருகன் நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக