புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வடக்கு அம்மாபட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முஸ்லிம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மையத்திற்கு மாநில அளவில் மாநில எழுத்தறிவு விருது வழங்கி சிறப்பித்தது.
இவ்விருது தமிழக மாண்புமிகு கல்வி அமைச்சர் உயர் திரு. அன்பில் மகேஷ் வழங்கினார், இம்மையத்தில் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மையத்துக்குரிய ஆசிரியர் பயிற்றுநர் மூன்று பேருக்கும் மாநில எழுத்தறிவு விருது வழங்கி சிறப்பித்தார்கள், இவ்விருதில் பதக்கம் சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக