அதையடுத்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆற்றில் கழிவுகளை கட்டுப்படுத்துவதற்காக இயக்கம் தெரிவித்த கோரிக்கைகளை இன்னமும் நிறைவேற்றாத நெல்லை மாநகர நிர்வாகத்திற்கு இயக்கப் பொறுப்பாளர்கள் நேரில் சென்று நினைவுறுத்துவது, விகேபுரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதியில் ஆற்றில் கழிவு கலப்பதை கட்டுப்படுத்துவது, முற்பகுதியில் மதுரா கோட்ஸ் உள்ளிட்ட ஆலைகளுக்கும், பிற்பகுதியில் தூத்துக்குடி ஆலைகளுக்கும் தேவைக்கு அதிகமாக நீர் அளித்துவிட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வாய்ப்பில்லாமல் செய்யும் பொதுப்பணி துறையின் அடாத நடவடிக்கையை நிறுத்துவது, பொதிகையடிமுழுதல் புன்னைக்காயல் வரை ஆற்றின் எல்லைகளை வரையறுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சீமைக் கருவேல மரங்கள் உள்ளிட்ட தேவையற்ற புதர் செடிகளை, அமலையை அகற்றவும் தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தினரை வலியுறுத்துவது, மதுரை உயர்நீதிமன்ற 2010 உத்தரவுப்படி தென்காசி அடங்கலாக மூன்று மாவட்டங்களிலும் கண்காணிப்பு குழுக்களை அமைக்க வலியுறுத்துவது, மூன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடி பார்வையில் மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை அமைப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி மிகப்பெரிய கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் நடத்துவது, அக்டோபர் இறுதிக்குள் தாமிரபரணி பாதுகாப்பு இயக்க 13ஆவது ஆண்டு மலர் வெளியிடுவது, ஆற்றை பாதுகாப்பதற்காக உயிர் தியாகம் செய்தவர்கள், மற்றும் பல்வேறு சட்ட, களப்பணிகள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், இயக்க ஆலோசகர்கள் வியனரசு, வழக்கறிஞர் சுதர்சன், கவிஞர் பேரா, இயக்கப் பொறுப்பாளர்கள், ஏரல் ஜெயபாலன், முக்கூடல் பிரமோத் முத்தரசு, நெல்லை செல்வம்,பேராசிரியர் பொன் சாம், தனசிங், சங்கர பாண்டியன், பால் அண்ணாத்துரை, அருள்ராஜ், பொன்ராணி, சேரன்மகாதேவி சீனிவாசன், ஜெலின், ஒருங்கிணைப்பாளர்கள் துரை, ஜெசிந்தா, இசபெல்லா, சங்கீதா சமுத்திரவள்ளி, உட்பட பலர் கலந்து கொண்டனர். மணிகண்டன் நன்றி கூறினார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக