திருக்கோவில் குடமுழுக்கு நடைபெறுமா? அல்லது உண்டியல் வருமானத்திற்காக திருக்கோயிலா? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

திருக்கோவில் குடமுழுக்கு நடைபெறுமா? அல்லது உண்டியல் வருமானத்திற்காக திருக்கோயிலா?


தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில் 20.08.2023 மாலை 6:40 மணி வரை திருக்கோயில் நடை திறக்காமல் உள்ளது. இதனால் தரிசனத்திற்கு வந்து காத்திருந்த பக்தர்கள் அவதி. இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

உண்டியல் வருமானத்தை மட்டும் எதிர்பார்க்கும் அறநிலைத்துறை பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்வது இல்லை, தரிசனத்திற்கு மட்டும் சரியான நேரத்திற்கு நடை திறப்பதில்லை, ஆனால் உண்டியல் வருமானத்தை மட்டும் சரியான நேரத்திற்கு கணக்கிட்டு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

திருக்கோயில் சுற்றுப்புற கட்டுமான பணி செய்வதற்காக மூலவர் விக்கிரகத்தை அகற்றிய நிலையில் இன்று வரை பூஜைக்காக மூலவர் நிறுவப்படவில்லை. திருக்கோயில் மூலவர் நிறுவப்படுவாரா? குடமுழுக்கு நடைபெறுமா? எதிர்பார்ப்பில் பக்தர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad