அரக்கோணம் இரயில் நிலையத்தில் பிளாட்பாரம் மாறி மாறி கூறுவதால் ரயில் பயணிகள் அவதி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

அரக்கோணம் இரயில் நிலையத்தில் பிளாட்பாரம் மாறி மாறி கூறுவதால் ரயில் பயணிகள் அவதி.


அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவர்கள் பயணிக்க வேண்டிய ரெயிலுக்கு செல்ல ரெயில்கள் எந்தெந்த பிளாட்பாரத்தில் வருகிறது என்பது குறித்து சரியான அறிவிப்பு இல்லை. சமீப காலமாக அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் ரெயிலுக்கு பிளாட்பாரங்களை மாற்றி அனுமதிப்பது பயணிகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. காலை சென்னை-திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 9.15 க்கு புறப்படுவது வழக்கம்.

இதனால் அந்த ரெயிலில் செல்லும் பயணிகள் வழக்கமாக வரும் 3-ம் பிளாட்பாரத்தில் காத்திருந்தனர். திடீரென இந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தை நெருங்கும் போது முதலாம் பிளாட்பாரத்திற்கு வந்து சேரும் என அறிவித்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சி க்குள்ளாகினர். உடனடியாக 3-வது பிளா ட்பாரத்தில் காத்திருந்த பயணிகள் குறுகிய நேரத்தில் மேம்பாலத்தை பயன்படுத்தி விரைவாக செல்ல வாய்ப்பு இல்லாததால் வயதான வர்கள், பெண்கள் படிக்கட்டில் ஏறி வருவதற்குள் ரெயில் வந்து விடுமே என அச்சத்தில் தண்டவாளத்தில் இறங்கி முதலாம் பிளாட்பாரத்தில் ஏற தொடங்கினர். 


இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் முதலாம் பிளாட்பா ரத்தை நெருங்கும் நிலையில் பெண்கள், வயதானவர்கள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயிலானது அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வருவதற்கு முன் எந்த பிளாட்பாரத்திற்கு வருகின்றது என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad