இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளி மோசஸ் என்பவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளி அரக்கோணத்தை சேர்ந்த மோசஸ் என்பவரை அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் பாரதி  தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் குற்றவாளி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
 

மேலும் இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி இ.ஆ.ப., அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதன் பேரில் மோசஸ் என்பவர் குண்டர் தடுப்பு காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad