மதுரை திருமங்கலத்தில் பாஜக அண்ணாமலை பேச்சு.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

மதுரை திருமங்கலத்தில் பாஜக அண்ணாமலை பேச்சு..

திருமங்கலத்தில் யாத்திரை எனக்கு திருப்தியாக இல்லை மக்களிடம் புகைப்படம் எடுத்து இணக்கமாக முடியவில்லை மீண்டும் திருமங்கலம் வருவேன். திருமங்கலத்திற்கு திருமங்கலம் ஃபார்முலா என்ற பெயர் உள்ளது. திருமங்கலம் அரவக்குறிச்சி கரும்புள்ளியாக உள்ளது.


திருமங்கலம் ஃபார்முலா இந்தியா முழுவதும் பரவி உள்ளது இதனை மாற்ற வேண்டும் என்றால் திருமங்கலத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும்..கடன் வாங்கி தான் ஆட்சியை நடத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகம் குடிப்பதில் முதன்மையாக திகழ்கிறது.. தமிழகத்தில் 18 விழுக்காடு ஆண்கள் அடிமையாக உள்ளனர்..


பாஜக வெள்ள அறிக்கை கொடுத்துள்ளோம் அதில் தென்னை பனை மரத்திலிருந்து வரும் இதையும் மக்கள் பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளோம். டாஸ்மாக்கை நிறுத்தி விட்டால் இதற்கு வருமானம் வராது என்பதற்காக இல்லை திமுகவிற்கு வருமானம் வராது என்பதற்காக. மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் தருவதற்கு திமுக அரசிடம் பணம் இல்லை அதனால் தான் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்..


தமிழகத்திற்குள் ஒரு தொழிற்சாலை வரவேண்டும் என்றால் திமுக குடும்பத்திற்கு 30 சதவீதம் கொடுக்க வேண்டும் அதனால் தான் இங்கு வராமல் அருகிலுள்ள மாநிலங்களுக்கு சென்று விடுகிறது. கடன்கார ஆட்சி, ஊழல் ஆட்சி, சாராயம் ஆச்சு மூன்றும் தமிழகத்தை பின்னோக்கி இழுத்து கொண்டு இருக்கிறது. பிரதமர் தமிழகத்திற்கு மட்டுமே 57 லட்சம் குடும்பத்திற்கு கழிப்பிடம் கட்டி கொடுத்துள்ளார். சாலையோர கடை வியாபாரிகளுக்கு கொரோனா காலகட்டத்தில் சுபநீதி என்ற திட்டத்தின் கீழ்  உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.


திமுக என்றாலே 
அ -அக்கிரமம்
ஆ -ஆக்கிரமிப்பு
இ - இரட்டை
உ -உருட்டு
ஊ- ஊழல் 
எ -எகத்தாளம் 
ஏ - ஏமாற்றுவது


திருமங்கலத்தில் பல்லாண்டு காலமாக பிரச்சனையாக இருப்பது கப்பலூர் டோல்கேட்.. இதனை மிக வேகமாக தனி கவனம் கொடுத்து நெடுஞ்சாலை துறையிடம் கவனித்துக் கொண்டு சென்று விதிமுறைக்கு முரண்பாக இருந்தால் டோல்கேட்டை எடுப்பதற்கு முயற்சி செய்வேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad