அதனடிப்படையில், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர், வசந்தம்.க.கார்த்திகேயன் சட்டமன்றத்தில் இதுகுறித்து பலமுறை பேசியும், கோரிக்கை வைத்தும் மற்றும் தமது பல்வேறு அலுவல் ரீதியான நடவடிக்கைகள் மூலம், வாணாபுரத்தை (பகண்டைXரோடு) தலைமையிடமாக கொண்டு புதிய தாலுக்கா உருவாக்கப்பட்டு, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றி தந்துள்ளார்.
தஙகளது நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றித் தந்த தங்களது ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம். க.கார்த்திகேயன், ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் துரைமுருகன் தலைமையில், வாணாபுரம் கிளைக்கழக செயலாளர் பிரகாஷ் அவர்கள் ஏற்பாட்டில், திமுக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து சீர்வரிசைப் பொருட்கள் அளித்து நன்றி கூறி மகிழ்ந்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் - க. சமியுல்லா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக