மதுரை அருகே இந்த காலத்திலும் அழகரை தரிசிக்க மாட்டு வண்டி பயணம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

மதுரை அருகே இந்த காலத்திலும் அழகரை தரிசிக்க மாட்டு வண்டி பயணம்.

மதுரை அருகே, சோழவந்தான் அருகே மழை வேண்டி ,கள்ளழகர் கோவிலுக்கு மாட்டுவண்டி பயணம் செய்தனர் பக்தர்கள். மதுரை, சோழவந்தானிலிருந்து பாரம்பரியமாக மாட்டுவண்டி கூட்டி, அழகர்கோவிலுக்கு கள்ளழகரை தரிசனம் காண செல்லும் கிராம மக்கள் விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டி 30 கி.மீ. மாட்டுவண்டி பயணம் மேற்கொள்ளும் கிராமமக்கள்.



மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள சி.புதூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 2 ஆண்டுக்கு ஒரு முறை ஆடி 18 -ஐ முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்து பாரம்பரிய முறையில் மாட்டுவண்டிகளை பூட்டி வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் அழகர்கோவிலுக்கு மாட்டுவண்டியில் சென்று  அங்கேயே இரவு முழுவதும் தங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்த உள்ளனர்.


அழகர்கோவில் மலை மீது உள்ள ராக்காயி அம்மன் கோவில் தீர்த்தத்தில்  புனித நீராடிய பின்னர், கள்ளழகர், ராக்காயி அம்மன், 18-ம் படி கருப்பசாமி தெய்வங்களை வணங்கிவிட்டு, தாங்கள் நேர்த்தி கடனாக கொண்டு வந்த கோழி, சேவல்களை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டு தங்களது விரதத்தினை முடித்து சொந்த ஊர் திரும்புவது இவர்களது வழக்கமாக உள்ளது.


விவசாயம் செழிக்க வலியுறுத்தியும், மழை பொழிய வலியுறுத்தியும் இந்த பாரம்பரிய மாட்டுவண்டி பயணம் மேற்கொண்டு கள்ளழகரை வழிபட்டு வருகின்றனர், அப்பகுதி மக்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad