இந்தியாவின் 75 ஆவது சுதந்திர அமிர்த பெருவிழா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சரும் ரூபாய் 515 கோடியில் பல ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக அடிக்கல் நாட்டு விழாவானது நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் நகரில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த அரக்கோணம் ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 23 கோடி பொருட்செலவில் நவீனமயமாக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் அரக்கோணம் இரயில் நிலையத்தை நவீன படுத்தும் திட்டத்திற்க்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அரக்கோணம் இரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் விஜயன் சின்னதுரை மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக