புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பயனற்று கிடக்கும் அம்மா பூங்கா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பயனற்று கிடக்கும் அம்மா பூங்கா.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ளது இந்த பூங்கா, இங்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி சிறுவர்கள் விளையாட என அதிக அளவில் மக்கள் வந்து செல்வதாக இருந்தது ஆனால் கடந்த சில மாதங்களாக சரிவர பராமரிக்காத காரணத்தால் மக்கள் வரத்து குறைந்து பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.


பார்க் முழுவதும் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள் பாதை முழுவதும் இலை சருகுகள் மேலும் பாதை முழுவதும் வளர்ந்து நிற்கும் செடிகள் சரிவர பராமரிக்காததால் காய்ந்த நிலையில் உள்ள செடிகள் யாருக்கும் பயன்படாமல் காய்ந்து கிடக்கும் மரக்கன்றுகள் ஆங்காங்கே சிகரெட் துண்டுகள் என மோசமான நிலையில் உள்ளது.


மேலும் சரியான நேரத்திற்கு திறப்பதில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்த்து நடவடிக்கை எடுத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுப்பார்களா...???? என்ற கேள்வி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம்  எழுந்துள்ளது.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad