கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் அருகே ஊராட்சி செயலாளர் பதவியை கவனிக்கும் துப்புரவு பணியாளர்!!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் அருகே ஊராட்சி செயலாளர் பதவியை கவனிக்கும் துப்புரவு பணியாளர்!!!


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அந்தேரிப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் பொறுப்பை துப்புரவு பணியாளர் பார்த்திபன் என்பவர் கவனித்து வருகிறார், இவர் பொதுமக்கள் ஏதேனும் குறை என்று ஊராட்சி செயலாளரிடம் கூற வேண்டும் என்றால் நான் தான் ஊராட்சி செயலாளர் என்னிடம் கூறுங்கள் இந்த அந்தேரிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் மொத்தமும் என்னிடம் தான் உள்ளது என்று பொது மக்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவலை கொடுத்து பொதுமக்களை திணற வைக்கிறார்.


எனவே சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இவர் வகித்து வரும் பதவியை செம்மையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பார்த்திபன் என்பவரின்  தந்தை இதே ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தர் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே முறையான நிர்வாகத்திற்கு முறையான ஊராட்சி செயலாளர்கள் அந்தேரிப்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் வேண்டுகோளாகவும் பொது மக்களின் வேண்டுகோளாகவும் உள்ளது உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்தியநாராயணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad