தலைவர் கலைஞர் அவர்களுக்கு உதகை, குன்னூர், கூடலூரில் திருவுருவசிலை மற்றும் நூற்றாண்டு விழாவை சிறப்புடன் கொண்டாடிட
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு.
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கழக தேர்தல்பணி செயலாளரும், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சருமான கா.ராமசந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, இளங்கோவன், திராவிடமணி, ராஜூ, எக்ஸ்போ செந்தில், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் அறிவுரைப்படி,
நீலகிரி மாவட்டத்திலும் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் தலைவர் கலைஞர் அவர்களின் சிலை அமைப்பது குறித்தும்,
5.8.2023 காணொலி வாயிலாக நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் மாண்புமிகு கழக தலைவர் அவர்கள் வழங்கிய அறிவுரைப்படி, தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை தலைமை கழக வழிகாட்டுதல்படி நீலகிரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, சேகரன், இளஞ்செழியன் பாபு, ஒன்றிய கழக செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், லாரன்ஸ், காமராஜ், பிரேம்குமார், பீமன், சிவானந்தராஜா, சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, பில்லன், ஷீலாகேத்ரின், ராஜேந்திரன், உதயதேவன், மோகன்குமார், ராஜா, செல்வம், காளிதாசன், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், சதீஷ்குமார், நடராஜன், முத்து, ரமேஸ்குமார், சஞ்சீவ்குமார், காளிதாஸ், மார்டின், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம்சசிகுமார், விவேகானந்தன், ஆல்வின், காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, வெங்கடேஷ், ஆலன், சீனிவாசன், அன்வர் அப்துல்லா, ஜெயகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவுபுல், பாபு, பத்மநாபன், வினோத்குமார்,முரளிதரன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமாராஜன், கோத்தகிரி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ராம்குமார், நகராட்சி தலைவர்கள்-துணை தலைவர் வாணீஸ்வரி, ஷீலாகேத்ரின், சிவகாமி, நாகராஜ், பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, ஜெயகுமாரி, கௌரி, சித்ராதேவி, ஹேமாமாலினி, வள்ளி, சத்தியவாணி, ராதா, உட்பட கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
கூட்ட முடிவில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக