ராணிப்பேட்டை: ஹாக்கி விளையாட்டு போட்டியினை ராணிப்பேட்டையில் திறந்தவெளி திரையில் அமர்ந்து பார்த்த அமைச்சர் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

ராணிப்பேட்டை: ஹாக்கி விளையாட்டு போட்டியினை ராணிப்பேட்டையில் திறந்தவெளி திரையில் அமர்ந்து பார்த்த அமைச்சர்

ராணிப்பேட்டை மாவட்டம் 7-வது ஹீரோ ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் கோப்பை-2023 ஹாக்கி விளையாட்டுப் போட்டி இன்று சென்னை ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, நடைபெற்று வருவதை  இராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிறுத்தத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திறந்தவெளி திரையில் (LED Screen) ஹாக்கி விளையாட்டுப் போட்டியினை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் ச. வளர்மதி.இ.ஆ.ப., பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் அமர்ந்து ஹாக்கி போட்டியினை கண்டு களித்தனர்.


இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன், திமுகவின் நகரச் செயலாளர் பூங்காவனம்,  நகர மன்ற துணைத் தலைவர்  ரமேஷ் கர்ணா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் S.வினோத்MC, மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன்MC, மாவட்ட சிறுபான்மை அணி அப்துல்லாMC, நகரத் துணைச் செயலாளர் ஏர்டெல் குமார், எல்லப்பன்MC, பிரபுMC, கோபி கிருஷ்ணாMc, நகர மாணவரணி அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட விளையாட்டு அலுவலர்  ஞானசேகரன் ஆகியோர் உடனிருந்தனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/