புதுச்சேரி: மழைக்காலங்களில் மழைநீர் வடிகால்களை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த உப்பளம் சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

புதுச்சேரி: மழைக்காலங்களில் மழைநீர் வடிகால்களை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த உப்பளம் சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி

புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட புஸ்ஸி வீதியில் மழைக்காலங்களில் எப்பொழுதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது, தண்ணீர் வடிந்து வெளியேற காலதாமதம் ஆகிறது அத்துடன் தற்போது அங்குள்ள சைடு வாய்க்கால் கழிவுநீர் அடைத்துக் கொண்டு தேங்கி நிற்கிறது இதனை உடனே சுத்தம் செய்து கொடுக்கும்படி, மேலும் மழைக்காலங்களில் அங்கு தண்ணீர் நிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி  கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரை நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டார்.



மேலும் உப்பளம் தொகுதியில் பெரும்பான்மையான இடங்களில் தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது அதனை சிறிது சிறிதாக சட்டமன்ற உறுப்பினர் சரி செய்து கொண்டு வருகிறார் அதனைத் தொடர்ந்து வாணரப்பேட்டை & ஆட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை இருக்கிறது ஆகையால் அங்கு போர் அமைத்து இதற்கு தீர்வளிப்பதற்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்  கடும் முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறார். 


தற்போது தமிழ்த்தாய் நகரில் போர் அமைப்பதற்காக பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வையுங்கள் என்று சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். வரும் வாரத்திற்குள் பணிகளை தொடங்குவதாக அதிகரிகள் சட்டமன்ற உறுப்பினரிடம் உறுதியளித்தனர் அதேபோல் தாவரவியல் பூங்காவிலும் போர் அமைத்து ஆட்டுப்பட்டி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் தண்ணீர் கிடைத்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார். 


அத்துடன் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை ஏற்று  உடனடியாக புஸ்ஸி வீதியில் உள்ள சைடு வாய்க்காலில் உள்ள தேங்கிய கழிவு நீரை அதிகாரிகள் நவீன வாகனங்கள் வைத்து சுத்தம் செய்து கொடுத்தனர். வரும் மழைக்காலத்திற்குள் டெண்டர் வைத்து வாய்க்காலில் மழைநீர் நிக்காமல் வெளியேறுவதற்கான பணிகளை மேற்கொண்டு தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். உடன் திமுக துணைத் தொகுதி செயலாளர் ஆரோக்கியராஜ், கிளை செயலாளர்கள் செல்வம் மற்றும் ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/