திருப்பத்தூர் மாவட்டத்தில் குரும்பேரி ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறி வார்டு உறுப்பினர்கள் வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் குரும்பேரி ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறி வார்டு உறுப்பினர்கள் வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு.

குரும்பேரி ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறி வார்டு உறுப்பினர்கள் வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு 


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரும்பேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமு உள்ளார்.


இந்த நிலையில் குரும்பேரி ஊராட்சியில் கொசு மருந்து அடிப்பது, கிராம சபை கூட்டம் நடத்திய கணக்கு, போடாத பைப் லைனுக்கு பைப் லைன் அமைப்பதாக கூறி கணக்கு எழுதுதல், பழுது பார்த்தல் எனக்கு கணக்கு எழுதுதல் எனக்கூறி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பல லட்ச ரூபாய் ஊழல் செய்துள்ளனர்.


மேலும் மாதாமாதம் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற வேண்டும் ஆனால் வார்டு உறுப்பினர்கள் கூட்டமே வைப்பதில்லை எனவும் வார்டு உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்


இந்த நிலையில் இன்று குரும்பேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் குரும்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ராமு, துணைத் தலைவர் சங்கீதா பிரகாசம், ஊராட்சி செயலர் தருமன் ஆகியோர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக கூறி வார்டு உறுப்பினர்கள், சரவணன், ராஜா, ஜகதா, சுலோச்சனா, தீபா, தவணகொடி, ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.


மேலும் இந்த சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் வெளிநடப்பு செய்த வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/