ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்ததேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்ததேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்ததேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை. 



 ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஹரிவனாஸ் ஸ்டேடியத்தில் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி நடைபெற்றது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஹரிவனாஸ் தானா  பகத் இன்டோர்  ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 23 முதல் 28 தேதி வரை நடைபெற்றது.  இப்போட்டியில் கடலூர் மாவட்ட வீரூ  கிக் பாக்ஸிங் தலைவர்   சென்சாய் வி.ரங்கநாதன் செயலாளர்  பி. சத்யராஜ்  தலைமையில் மாணவ மாணவியர்கள் தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் மூலம் தமிழக அணியாக தேசியப்  போட்டியில் மாணவர்கள் பங்கு பெற்றனர் . இப்போட்டிகள்  ரிங் பைட்,  கிட் லைட்,லைட் காண்டக்ட் ,  லோகிக்  பாயிண்ட் பைட்  என பல்வேறு பிரிவுகளில் இப்போட்டி  நடைபெற்றது.இதில் மாணவன் வி. முகுந்தன், மாணவிகள் எஸ்.சுபாஷினி,  ஆர்.ரித்திகா, கே. மகாலட்சுமி ஆகியோர் முதல் பரிசும் ஜே.அச்சையா,கே.தர்மிஸ்தா, ஆர்.


 ரிஷிகா, கே.கார்த்திகா,  ஆர்.நந்தினி, எஸ்.ஹரிஷ்வரன் ஆகியோர் இரண்டாம் பரிசும் பி ரேவன் பெற்றிட் மூன்றாம் பரிசும் பெற்றனர். தேசிய நடுவர்களாக ஆர் ரவிக்குமார் கே. மகாலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மாணவர்களுக்கு உறுதுணையாக குமரேசன் மற்றும்ஜெயபால் மாணவிகளுக்கு உறுதுணையாக திவ்யா மற்றும் தேன்மொழி ஆகியோர் செயல்பட்டனர்.வெற்றி பெற்ற மாணவர்களை வீரு  கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் சென்சாய் ரங்கநாதன்  பள்ளி நிறுவனர்கள்  பள்ளித்தலைமை ஆசிரியர்கள்  அரிமா சங்கத் தலைவர்கள் வர்த்தக சங்கத் தலைவர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் கராத்தே பயிற்சியாளர்கள் பெற்றோர்கள் என அனைவரும்மனமார பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/