சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த நாகர்ஜூன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியை மாணவி லலினா சென்னை ஆலந்தூர் மான்போர்ட் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு கராத்தே சங்கம் சார்பில் தமிழ்நாடு கராத்தே சாம்பியன் 2023 பட்டத்திற்கான போட்டி ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் 6 முதல் 13 வயது வரை சுமார் 2407 மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளார்கள். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நாகர்ஜூன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியை சேர்ந்த மாணவி லலினா ரவீந்திரன் 18 மாதங்களாக கராத்தே பயின்று பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த இப்போட்டியில் 12 வயது சண்டை பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வெள்ளி பதக்கம் வென்று "தமிழ்நாடு கராத்தே சாம்பியன்" பட்டத்தை வென்றார். இம்மாணவி மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார். இவருடைய பெற்றோர் மானாமதுரை இரயில்வே காலனியை சேர்ந்த ரவீந்திரன் - பாலபிரியா தம்பதிகள், இவர்களுக்கு இரண்டவது மகள் லலினா ஆவார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு பயிற்சி அளித்த சிவ. நாகர்ஜூன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக வரவேற்றார்கள்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக