திருப்பூர் ஊத்துக்குளி அருகே பீர் பாட்டில்களுடன் சென்ற லாரி கவிழ்ந்தது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

திருப்பூர் ஊத்துக்குளி அருகே பீர் பாட்டில்களுடன் சென்ற லாரி கவிழ்ந்தது

திருப்பூர் ஊத்துக்குளி அருகே பீர் பாட்டில்களுடன் சென்ற லாரி கவிழ்ந்தது. மது பிரியர்கள் அள்ளிச் சென்றனர் மது பாட்டில்களை! செங்கல்பட்டில் இருக்கும் தனியார் மதுபான ஆலையில் இருந்து கோவையில் உள்ள டாஸ்மார்க் குடோனுக்கு 25 ஆயிரத்து 200 பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லக்கவுண்டன் பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் லேசான காயத்துடன் தப்பினார். இந்த விபத்தில் லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் கீழே விழுந்து உடைந்து சிதறின அப்போது பாட்டிலில் இருந்த பீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. செய்தி அறிந்த மதுபான பிரியர்கள் உடையாமல் கிடக்கும் பீர் பாட்டில்களை போட்டி போட்டு அள்ளி சென்றனர் பலர் தங்கள் வேஷ்டிகளில் கட்டிக் கொண்டு எடுத்துச் சென்றனர், சிலர் அருகில் உள்ள மறைவான இடத்திற்கு பாட்டில்களை கொண்டு சென்று அங்கேயே பீர் அருந்தினர். சம்பவம் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் பீர் பாட்டிலை எடுத்து செல்வதை தடுத்து நிறுத்தினர்.இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad