அங்கன்வாடி குழந்தைகளை காக்கவும் , அடிப்படை வசதிகளை கேட்டும் திருப்பூர் மாநகராட்சி 1- வது மண்டல அலுவலகத்தை சிபிஐ(எம்) கட்சி முற்றுகை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

அங்கன்வாடி குழந்தைகளை காக்கவும் , அடிப்படை வசதிகளை கேட்டும் திருப்பூர் மாநகராட்சி 1- வது மண்டல அலுவலகத்தை சிபிஐ(எம்) கட்சி முற்றுகை

அங்கன்வாடி குழந்தைகளை காக்கவும் , அடிப்படை வசதிகளை கேட்டும் திருப்பூர் மாநகராட்சி 1- வது மண்டல அலுவலகத்தை சிபிஐ(எம்) கட்சி முற்றுகை ! திருப்பூர் மாநகராட்சி 14வது மட்டும் பத்தாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தார் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அனுப்பர்பாளையம் கிளைகள் சார்பில் நகர குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், நகர செயலாளர் நந்தகோபால், நகர குழு உறுப்பினர்கள் நவபாலன் ,சின்னச்சாமி, அனுப்பர்பாளையம் பகுதி கிளை செயலாளர்கள் முத்துக்குமார், ரகுபதி, பிரவீன் குமார், நாகேந்திரன் , மாதர் சங்க துணை தலைவி கிருஷ்ணவேணி கிளைச் செயலாளர் சாந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அனுப்பர்பாளையத்தில் உள்ள ஒன்னாவது மண்டல அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உதவி கமிஷனர் முருகேசனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அனுப்பர்பாளையம் 10-வது வார்டு சௌபாக்கியா நகர், கோகுலம் காலனி, காமாட்சி அம்மன் நகர், காயத்திரி நகர், மாரியம்மன் கோவில் வீதிகளிலும், 14 - வது வார்டு அனுப்பர்பாளையம் பகுதியில் நேரு வீதி, வீர மாருதி வீதி, ஜீவா வீதி, குமரன் வீதி, பாரதியார் வீதி , வ உ சி வீதி, மாதேஸ்வரன் கோவில் வீதிகளிலும் குடிநீர் பணிகளுக்காகவும் பாதாள சாக்கடை தொட்டிகள் அமைக்கவும் தோண்டப்பட்ட சாலைகள் ஆண்டு கணக்கில் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக கிடைக்கின்றன, இதனால் பொதுமக்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர் எனவே காலதாமதம் செய்யாமல் உடனடியாக சாலைகளை சமன்படுத்தியும் இடிந்து மண் முடி கிடக்கும் கழிவுநீர் வடிகால் வாய்களை தரமான முறையில் கட்டிக் கொடுக்க வேண்டும், தரமான தார் சாலைகள் அமைத்து தர வேண்டும், மேலும் 10 - வது வார்டு காயத்ரி நகரிலும் வார்டுக்குள் தேவையான இடங்களில் உப்பு தண்ணீர் குழாய்கள் அமைத்தும் 14- வது வார்டு ஏவிபி ரோடு, மாரியம்மன் கோவில் அருகில் குவிந்து கிடக்கும் குப்பைகளை தினமும் அகற்றிட வேண்டும் இந்த இடத்தில் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளதால் இதில் ஆயிரக்கணக்கான ஈக்கள் பக்கத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் உள்ளே செல்வதால் அங்குள்ள குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இங்கு குப்பை தேக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசன் நகர், 7வது டே ஸ்கூல் ரோட்டில் புதிய தார் சாலை அமைக்கவும் தெரு விளக்கு அமைக்கவும் இந்த பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைத்து அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு கொடுத்திடவும் அனுப்பர்பாளையம் மெயின் ரோட்டில் அடிக்கடி குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை தடுக்கவும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீர் கசிவை தடுத்து மக்கள் வரிப்பணத்தை வீணாவதை தடுத்திட வேண்டும் எனவும் காயத்திரி நகர் இரண்டாவது வீதியில் பழைய தார் சாலையை அப்புறப்படுத்தி விட்டு புதிய தார் சாலை அமைக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட உதவி கமிஷனர் முருகேசன் உடனே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வரவழைத்து மனுவில் கூறப்பட்டிருந்த புகார்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டார்.  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செயலாளர் காஜா மொய்தீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad